சுவிட்சர்லாந்தில் 61 வயதான மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் வோட் கான்டனின் ரென்னின்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனைவியை கொலை செய்ததாக குறித்த பெண்ணின் கணவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் மற்றும் அவரது 64 வயதான கணவர் ஆகிய இருவரும் சுவிட்சர்லாந்து பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மரணத்திற்கான காரணங்களை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.