வெளிநாடுகளுக்கான உதவிகளை குறைப்பதற்கு சுவிட்சர்லாந்து தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஆண்டில் சர்வதேச ஒத்துழைப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வரையறுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு கடன் உதவியை சுவிட்சர்லாந்து அரசாங்கம் 250 மில்லியன் சுவிஸ் பிராங்குகளினால் குறைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து இராணுவத்தின் செலவுகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் இந்த செலவு குறைப்பு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து நாடாளுமன்றில் கலந்துரையாடிய போது வெளிநாட்டு உதவிகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.