இஸ்ரேலிய படையினர் காசா நிலப்பரப்பில் இனவழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையினால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பாலஸ்தீன மக்களை இஸ்ரேலிய படையினர் இனவழிப்புச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இனவழிப்பில் ஈடுபட்டமைக்கான டிஜிட்டல் மற்றும் காணொளி ஆதாரங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
1948 ஆம் ஆண்டு இனவழிப்பு பிரகடனத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து தடை செய்யப்பட்ட செயல்பாடுகளில் மூன்று செயல்பாடுகளை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
சிவிலியன்களை படுகொலை செய்தல், சிவிலியன்களை உடல் ரீதியாக துன்புறுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.