நோர்வே நாட்டுப் பிரஜைகள் அதிக எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு அதிக அளவான நோர்வே செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.
நோர்வையில் அமல்படுத்தப்படும் வரி தொடர்பில் செல்வந்தர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதனால் அதிக எண்ணிக்கையிலான செல்வந்தர்கள் வேறு நாடுகள் நோக்கி நகர தொடங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக சுவிட்சர்லாந்து செல்வந்த வெளிநாட்டுப் பிரஜைகளின் கவர்ச்சிகரமான நாடாக காணப்படுகின்றது.
கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சுமார் 70 நோர்வே செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளனர்.
செல்வந்தர்கள் மீது நோர்வே அரசாங்கம் கூடுதல் வரி விதிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.