பிரான்ஸ் பிரதமர் மிச்சல் பார்னியர் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைந்துள்ளார்.
பிரான்ஸில் கடந்த அறுபது ஆண்டுகளில் முதல் தடவையாக நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அரசாங்கமொன்று கவிழ்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றில் 331 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம் 73 வயதான பார்னியர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பார்னியர் அதிகாரபூர்வமாக தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்துமாறு தற்பொழுது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.