-6.3 C
Switzerland
Saturday, February 8, 2025

இலங்கையில் தேங்காய் விலை பாரியளவில் உயர்வு

Must Read

இலங்கையில் தேங்காய் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேங்காய் விலை 220 மற்றும் 230 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில் விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

தேங்காய் விலை உயர்வால், 2025ம் ஆண்டு பாற்சோறு சமைப்பது கூட பிரச்சினையாகி விட்டதாகவும் கூறுகின்றனர்.

சில பகுதிகளில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

தேங்காய்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தலையிடாதது ஏன் என நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, தேங்காய் விலை அதிகரிப்புக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் சாதொச விற்பனை நிலையங்களில் ஒருவருக்கு 3 தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 130 ரூபாவிற்கு ஒரு தேங்காய் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES