உலகின் மிகவும் பாதுகாப்பான நகரமாக சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Safety Risk Map 2025 என்ற பட்டியலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குற்றச்செயல்கள், அரசியல் ஸ்திரத்தன்மை, சுகாதார பிரச்சினைகள் மற்றும் காலநிலை காரணிகள் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த பாதுகாப்பான நகரம் தெரிவு குறித்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
குற்றச் செயல்கள் குறைந்த நகரமாக பேர்ன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பேர்னில் சமூகப் பொருளாதார ஸ்திரத்தன்மையும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டம் ஒழுங்கு வெளிப்படைத்தன்மையுடன் அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.