சுவிட்சர்லாந்து விமான சேவை நிறுவனம் 5 புதிய விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளது.
ஏ 350-900 விமானங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட உள்ளது.
மேலும் ஏ-350எஸ் ரக ஐந்து விமானங்களும் கொள்வனவு செய்யப்பட உள்ளது.
இந்த 10 விமானங்களும் எதிர்வரும் 2031 ஆம் ஆண்டு கிடைக்க பெறும் என சுவிட்சர்லாந்து விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ 350-900 விமானங்கள் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் மிகவும் நவீனமான விமானம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானம் சிறந்த எரிசக்தி பயன்பாட்டை கொண்டது எனவும் கார்பன் வெளியேற்றத்தை வரையறுக்க கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வானங்கள் ஒலி எழுப்பக்கூடிய தன்மையும் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.