இலங்கையில் தேர்தல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுபானசாலை உரிமங்களை லஞ்சமாக வழங்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 172 மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி காலத்தில் இவ்வாறு மோசடி இடம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக 80 மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தமாக அந்த ஆண்டில் 172 மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அப்போதைய நிதி அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க மதுபான சாலை உரிமங்களை வழங்கியமை தொடர்பில் தற்பொழுது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவ்வாறு மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்படுவது பொருத்தமற்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனேகமான உரிமங்கள் அரசியல் ரீதியான அடிப்படைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ஒருவரின் 19 வயது மகனுக்கும் மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய வர்த்தகர்கள் அமைச்சர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலருக்கு இவ்வாறு மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களின் பிரத்தியேக செயலாளர்கள் மதுபான நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இவ்வாறு மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தலை இலக்கு வைத்து மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சில மதுபான சாலை உரிமங்கள் 600 மில்லியன் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.