சுவிட்சர்லாந்தின் போக்குவரத்து பொலிஸாருக்கு ஸ்டன்ட் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் உத்தியோகத்தர்கள் இந்த ஸ்டன்ட் துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுமதி வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த யோசனை பிரதிநிதிகள் சபையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்பொழுது இந்த ஸ்டண்ட் துப்பாக்கி பயன்பாடு குறித்த சட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பொலிஸார் இந்த ஸ்டண்ட் துப்பாக்கிகளை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பயணிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த ஆயுதத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
வன்முறையாக செயல்படும் நபர்கள் குறிப்பாக கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த ஸ்டண்ட் துப்பாக்கிகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்டன்ட் துப்பாக்கிகள் மூலம் மின்சார அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டு காயங்கள் இன்றி ஒருவரை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.