தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யேல் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியமைக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு நாட்டில் பெரும் அரசியல் பதற்ற நிலையை உருவாக்கியிருந்தது.
இந்தநிலையில் தமது தீர்மானம் குறித்து தென் கொரிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார்.
மீண்டும் இவ்வாறு இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களி அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் இதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது.