சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாட் தலைமறைவாகியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகரில் இருந்து ஜனாதிபதி பஷர் அல் அசாட் தப்பிச் சென்றுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரிய கிளர்ச்சியாளர்கள் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி இருந்தனர்.
அந்த வகையில் இறுதியாக தலைநகர் டமஸ்கசை கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலைமையினால் மத்திய கிழக்கு முழுவதிலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
தலைநகரை விட்டு தப்பிச் சென்றுள்ள ஜனாதிபதி அசாட்டை தேடி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் காலை சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கசை கைப்பற்றியதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அசாட்டிடமிருந்து இதுவரையில் எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, சிரியவில் இடம்பெற்று வரும் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.