அகில இலங்கை தமிழ் காங்கிரசின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனம் ஒன்றில் மோதுண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் போலவத்த சந்திப் பகுதியில் பாதசாரிகள் கடவையில் நடந்து சென்ற பெண் யாசகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் சுமார் 65 முதல் 70 வயதான வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இடம் பெற்ற போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாகனத்தில் பயணித்தார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.