சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைதூக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பசர் அல் அசாட் பதவி கவிழ்க்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடும் என தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சிரிய அரசாங்கத்தை மிகவும் வேகமாக கிளர்ச்சியாளர்கள் வீத்தியமை உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் இலக்குகள் மீது அமெரிக்கா கடந்த வாரம் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் இந்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பிராந்திய வலயத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து இந்த விஜயத்தின் போது கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.