தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சூக் யீல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா அதிகாரிகளினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தென்கொரியாவில் இராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
பின்னர் அந்த அறிவிப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டது.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஜனாதிபதி யூன் தப்பித்துக்கொண்டார்.
எவ்வாறெனினும், ஜனாதிபதி யூன் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு அவரது கட்சி உறுப்பினர்களே வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவில் தொடர்ந்தும் அரசியல் பதற்ற நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.