சிரியாவில் இடைக்கால பிரதமர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த பசர் அல் அசாட் அண்மையில் ஆட்சி கவிழ்க்கப்பட்டார்.
கிளர்ச்சியாளர்கள் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை முற்றுகையிட்டதன் பின்னர் அசாட், ரஸ்யாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்து ஆட்சி செய்யத் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி சிரியாவின் இடைக்கால பிரதமராக மொஹமட் அல் பசீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி வரையில் தாம் இடைக்கால பிரதமர் பதவியில் நீடிக்கப் போவதாக பசீர் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.