சிரிய ஏதிலிக் கோரிக்கையாளர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதனை சுவிட்சர்லாந்து இடைநிறுத்தியுள்ளது.
சிரியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்து வந்த பசர் அல் அசாட்டின் ஆட்சி அண்மையில் கவிழ்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைப் போன்றே சுவிட்சலாந்திலும் ஏதிலி கோரிக்கையாளர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வது இடைநிறுத்தப்பட உள்ளது.
சிரிய ஏதிலிக் கோரிக்கையாளர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.