சுவிட்சர்லாந்தில் கடந்த 2023ம் ஆண்டில், சுமார் ஏழு லட்சம் பேர் குடிப்பெயர்ந்துள்ளனர்.
புதிய இடங்களுக்கு இவ்வாறு புலம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்திற்குள் புலம்பெயர்ந்துள்ளதாகவும் சிலர் கான்டன் விட்டு வேறும் கான்டனில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்திற்குள்ளேயே 695000 பேர் குடிப்பெயர்ந்துள்ளனர்.
பேசல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலிருந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் குடிப்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.