-2.3 C
Switzerland
Wednesday, January 15, 2025

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம்

Must Read

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் என்பது நட்டமடையும் அரச நிறுவனங்களில் முன்னிலை வகிக்கின்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மாற்றி தற்போதைய அரசாங்கம் அதனை தேசிய விமான சேவையாக முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளது.

இதன்படி ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை தனியார் மயப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தை முன்னெடுத்து செல்வதனால் விமானம் ஒன்றை கண்ணால் பார்க்காத மக்கள் கூட அதற்காக வரியை செலுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நட்டத்தை அனுபவித்து வருவதுடன் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளது.

இவ்வாறான ஒரு நிறுவனத்தை தொடர்ந்தும் அரசாங்க கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த நட்டம் 166 பில்லியன் ரூபாய் ஆகும் 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக நட்டம் குறைவடைந்தது.

இதன்படி 2022 ஆம் ஆண்டு மொத்த நட்டம் 74 பில்லியனாக குறைக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் மொத்த நட்டம் 79 பில்லியனாக பதிவானது.

விமான சேவை நிறுவனத்தை தனியார் முயற்சியாண்மை முறமையூடாக முன்னெடுப்பது மிகவும் பொருத்தமானது என வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சீல பெரேரா பரிந்துரையொன்றை முன் வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எமிரேட்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கிய போது லாபமீட்டி இருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் இந்த நிறுவனத்தை பொறுப்பேற்றது முதல் நட்டம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சிறந்த முறையில் முகமைத்துவம் செய்வதன் மூலம் லாபம் ஈட்டக்கூடிய ஒன்று என்பது எமிரேட்ஸ் நிறுவனம் நிரூபித்துள்ளது.

சிறந்த முகமதுவத்தை மேற்கொண்டால் மீண்டும் லாபமீட்ட முடியும்.

அதிகளவான விமானங்கள் பழையவை என்பதனால் அவற்றை சேவையிலிருந்து அகற்றி, புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கு பெருந்தொகை பணத்தை முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறு பெரிய தொகை பணத்தை செலவிட முடியுமா என்பது தெரியவில்லை.

இதனால் விமானம் ஒன்றை கண்ணில் காணாதவர் கூட விமான சேவை நிறுவனத்தை கொண்டு நடத்துவதற்காக வரி செலுத்தி வருவதாக பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தொடர்ச்சியாக நட்டம் அடைவதனால் அவ்வாறானவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது பாரிய சவால் மிக்கதாகும் இந்த சவாலை வெற்றி கொள்வதற்கு அமைப்பு ரீதியில் பாரிய மாற்றங்களை மேலிருந்து கீழ் வரையில் செய்ய வேண்டியுள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவு பேராசிரியர் கலாநிதி நிலுகா பிரியதர்ஷினி தெரிவிக்கின்றார்.

இது அரசாங்கத்திற்கு பெரிய சவாலான விடயமாகும்.

ஏனெனில், நட்பு ரீதியில் தெரிந்தவர்களுக்கு இந்த பதவிகள் வழங்கப்படுவதனை ஜேவிபி கடந்த காலங்களில் எதிர்த்து வந்தது.

எனவே விமான சேவை நிறுவனத்தை மறு சீரமைக்கும் போது அடிப்படை ரீதியான மாற்றங்களை கொண்டு வர வேண்டி உள்ளது.

எனவே முகாமைத்துவம் முதல் விமான நிலையங்களை தரையிறக்கும் இடங்கள் வரையில் அனைத்து விடயங்களிலும் மாற்றங்கள் செய்ய முடியும் வேண்டும்.

எனினும் அது அவ்வளவு எளிதான விடயம் என்று நான் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஒரு சவாலாக எடுத்து மேற்கொள்ள முடியும் அனைத்து விடயங்களிலும் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்தும் இந்த நிறுவனத்தை வைத்திருப்பது சில நன்மைகளும் காணப்படுகின்றன.

புதிய பணிப்பாளர் சபை எவ்வளவு செயற்திறனாக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்பதன் அடிப்படையில் அரசாங்கத்தின் தீர்மானம் சரியானதா அல்லது பிழையானதா என்பது வெளிப்படும்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES