உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இந்திய இளைஞர் வெற்றியீட்டியுள்ளார்.
குகேஸ் தொமுராஜ் என்ற பதினெட்டு வயதான குகேஸ் அபார திறமைகளை வெளிப்படுத்தி உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த உலக சாம்பியன் டிங் லைரினை வீழ்த்தி குகேஸ் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற 14 ஆட்டங்களைக் கொண்ட போட்டித் தொடரில் குகேஸ் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
உலகின் பதினெட்டாவது சதுரங்க உலக சாம்பியன் பட்டத்தை 18 வயதாக குகேஸ் தனதாக்கிக் கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்தப் போட்டியில் வெற்றியீட்ட முடியும் என தாம் கருதவில்லை எனவும், இது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் குகேஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் வென்றமைக்காக பரிசுத் தொகையாக 2.5 மில்லியன் டொலர்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரொறன்ரோவில் நடைபெற்ற போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் குகேஸ் உலக சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் குகேஸ் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.