உலகின் முன்னணி சமூக ஊடகங்கள் சில மணித்தியாலங்கள் முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்றன இவ்வாறு முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆசியா, தென்னாபிரிக்கா, அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இவ்வாறு சமூக ஊடகங்கள் முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சில மணி நேரம் செயலிழந்திருந்த குறித்த சமூக ஊடகங்கள் தற்பொழுது வழமைக்கு திரும்பியுள்ளன.
சமூக ஊடகங்கள் செயலிழந்துள்ளதாகவும் விரைவில் அவை வழமைக்கு திரும்பும் எனவும் குறித்த நிறுவனங்கள் அறிவித்திருந்தன.
கடந்த 2021 ஆம் ஆண்டும் இவ்வாறான ஓர் முடக்கம் பதிவாகி இருந்தது.
சுமார் 6 மணித்தியாலங்கள் சமூக ஊடகங்கள் முடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
என்ன காரணத்தினால் இவ்வாறு சமூக ஊடகங்கள் முடங்கின என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.