இந்தியாவின் அதானி குழுமத்தின் முதலீடு மிகவும் அவசியமானது என துறைமுகங்கள், போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதானி குழுமத்தின் முதலீடுகள் இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை தனியார்மயப்படுத்தும் எவ்வித திட்டங்களும் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், துறைமுகத்தின் அபிவிருத்திக்காக தனியார்துறையுடன் இணைந்து செயற்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் காற்றாலைகளில் அதானி குழுமம் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பை வெளியிடும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், கொழும்பு துறைமுகத்திற்கு அதானி குழுமத்தின் முதலீடு அவசியமானது என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.