-2.3 C
Switzerland
Wednesday, January 15, 2025

உலக செல்வந்தர் பட்டியலில் மஸ்க் முன்னணி

Must Read

 

உலக செல்வந்தரான எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்துள்ளார். டெஸ்லா, ஸ்பெஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் சமூக வலை தளம் ஆகியவற்றின் உரிமையாளரான அவரது சொத்து மதிப்பு சமீபகாலமாக ஏற்றமடைந்து வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்தார். டரம்ப் வெற்றி பெற்றதும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 65 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் அவரது மற்ற நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தது. இதனால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்தது.

இந்த நிலையில் உலக செல்வந்தர்கள் பட்டியலில் நிகர சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார்.

ப்ளூம் பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

ஸ்பெஸ்எக்ஸ் நிறுவ னத்தின் முதலீட்டாளர்கள் 1.25 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்தின் மதிப்பு 50 பில்லியன் டொலர் உயர்ந்து 440 பில்லியன் டொலராக அதிகரித்தது.

மேலும் ஒரு ஒப்பந்தம் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன மதிப்பு சுமார் 350 பில்லியன் டொலராக உயர்ந்தது. இதனால் எலான்மஸ்க்குக்கு கிட்டத்தட்ட 20 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மஸ்க் தனது நிகர மதிப்பில் 218 பில்லியன் அமெரிக்க டொலர்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES