காசாவின் சமாதான தீர்மானத்திற்கு சுவிட்சர்லாந்து தனது ஆதரவினை வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிபந்தனையற்ற நீண்ட கால சமாதானத்தை வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 158 நாடுகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன.
இந்த தீர்மானத்திற்கு எதிராக வெறும் 9வாக்குகள் மட்டும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.