புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்று (13) அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
இராஜினாமா கடிதத்தை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் என என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னர் சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பொதுச் சட்டத்தின் கீழ் வாக்களித்து அல்லது நியமனம் மூலம் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பத்தியை நியமிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி கவனம் செலுத்தி வருகின்றது, தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவனான நிஹால் கலப்பத்தி தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.