சுவிட்சர்லாந்தில் தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 14 வயதான மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியரை தாக்கியுள்ளான்.
தலைமை ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிகாரிகள் மீது குறித்த மாணவன் தாக்குதல் நடத்தியதுடன் கடுமையாக திட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவன் தலைமை ஆசிரியரையை பல தடவைகள் மோசமாக தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.