இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு எதிராக செயற்பட்டு வந்தவர்கள் இவ்வாறு கட்சியிலிருந்து எதிர்வரும் நாட்களில் நீக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.
கட்சிக்கு எதிரான வகையில் தேர்தலில் போட்டியிட்டவர்களை நீக்குவதற்கு கட்சியின் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாகவும் சிலர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் கட்சி தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களினால் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைய செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.