தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சூக் யேலுக்கு எதிராக குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி அவர் பதவியிலிருந்து இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தென் கொரியாவின் ஜனாதிபதி ராணுவ சட்டத்தை அமுல்படுத்தினார்.
இவ்வாறு அமுல்படுத்திய சில சொற்ப நேரத்தில் அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது.
எனினும் அவருக்கு எதிராக அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி இருந்தனர்.
இந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறானோ பின்னணியில் இன்றைய தினம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் யூனின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யூன் பதவியில் நீடிப்பதா இல்லையா என்பதை அந்நாட்டு அரசியல் அமைப்பு நீதிமன்றம் விரைவில் தீர்மானிக்கும்.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் இரண்டாவது தடவையாக தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.