சிரியாவில் அண்மையில் ஆட்சி கவிழ்ப்பினை மேற்கொண்ட கிளர்ச்சியாளர்களுடன் அமெரிக்கா நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் அந்தனி பிலின்கன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் சிரியாவில் ஆட்சி நடத்தி வந்த பஸர் அல் அசாடின் தலைமையிலான அரசாங்கம் அண்மையில் கவிழ்க்கப்பட்டது.
சிரிய கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல்களை மேற்கொண்டு நகரை கைப்பற்றி இருந்தனர்.
அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் கிளர்ச்சியாளர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
சிறுபான்மை சமூகத்தினருக்கு தீங்கு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் அனைத்து சமூகங்களையும் பாதுகாக்க கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு இடம் அளிக்கப்படக் கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.