சுவிட்சர்லாந்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவருக்கு வேகமாக தண்டனை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.வி.பி கட்சி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு வேகமாக தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடு ஈடுபடுபவருக்கு தற்பொழுது வழங்கப்படும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது இல்லை என எஸ்விபி கட்சி தெரிவித்துள்ளது.
சில பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனை எதுவும் வழங்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகள் ஓராண்டுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் அவர்களுடைய குற்ற செயல்களுக்கு ஏற்ற வகையில் தண்டிக்கப்பட வேண்டும் என எஸ்விபி கட்சி மேலும் அரசாங்கத்திடம் கோரிக்கையை விடுத்துள்ளது.