ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐக்கியத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஐரோப்பிய பிராந்திய வலய நாடுகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய பிராந்திய வலயத்தைச் சேர்ந்த பல நாடுகள் தற்பொழுது எல்லை பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
சிறிய நாடுகள் முதல் பலம் பொருந்திய நாடுகள் வரை பிராந்திய வலயத்தின் அநேக நாடுகள் உள்ளக எல்லை கட்டுப்பாட்டு செயல்முறைகளில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
பல்கேரியா, ரோமானியா போன்ற செங்கன் பிராந்தியத்தில் விரைவில் இணைந்து கொள்ள உள்ள நாடுகளும் கடுமையான எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இணைந்து கொண்டுள்ளன.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு செங்கன் நாடுகளின் சிறிய மாநிலமான லக்சம்பேர்கிற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாக இணைக்கப்பட்டுள்ளது.
பிராந்திய வலய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் கடுமையான அடையாள சோதனைகளுக்கு உட்படுத்தப்படாது.
ஐரோப்பிய பிரஜைகள் கடுமையான அடையள சோதனையின்றி, எல்லைகளை கடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தற்பொழுது உலகளாவிய ரீதியில் குடியேறிகளின் அதிக அளவான பிரவேசம் காரணமாக நாடுகள் சுய எல்லை கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன.
இந்த அதிகரிப்பின் காரணத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோட்பாடுகளுக்கு ஐக்கியத்திற்கும் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.
ஐரோப்பியர்கள் சுதந்திரமாக பிராந்திய வலய நாடுகளுக்கு பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் படிப்படியாக குறைவடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஏதிலி கோரிக்கையாளர்கள் குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.