காசாவில் பாரிய மனித பேரவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
காசா பிராந்தியத்தில் இஸ்ரேலிய படையினர் முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு பாலஸ்தீன மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இது தொடர்பில் மீண்டும் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இந்த மோதல் சம்பவங்களில் இதுவரையில் 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல்களில் காயமடைந்துள்ளனர்.
சுமார் இரண்டு மில்லியன் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெயர நேரிட்டுள்ளது.
காசா பிராந்திய வலயத்தில் சுமார் 70 வீதமான உட்கட்டுமான வசதிகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சுகாதார சேவை முதல் நீர் வினியோக கட்டமைப்பு வரை பல்வேறு உட்கட்டுமான வசதிகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
காசாவில் இயங்கி வரும் 36 மருத்துவமனைகளில் 17 மருத்துவமனைகள் மட்டும் பகுதி அளவில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மருந்து பொருட்கள் மருத்துவ சாதனங்கள் என்பனவற்றிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 50,000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நடத்திச் செல்லப்படும் பாடசாலை ஒன்றில் இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரிய படையினர் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கொலைகள் போர் குற்ற செயல்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச குழு இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.