சுவிட்சர்லாந்தில் பள்ளிக்கூடங்களில் அலைபேசி பயன்பாட்டை தடை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பள்ளிக்கூடங்களில் அலைபேசி பயன்பாட்டை தடை செய்ய வேண்டுமென 82 வீதமானவர்கள் கோரியுள்ளனர்.
18 வயது முதல் 25 வயது வரையிலான இளைய தலைமுறையினரும் பள்ளிக்கூடங்களில் அலைபேசி பயன்பாட்டை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக்கூடங்களில் அலைபேசி பயன்பாட்டை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுப்பவர்களில் பெண்களே முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 87 வீதமான பெண்கள் அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வலதுசாரி மக்கள் கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயகக் கட்சி என்பனவும் அலைபேசி பயன்பாட்டு தடைக்கு ஆதரவினை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.