சுவிட்சர்லர்நதில் விமானப் பயணிகளின் தரவுத் தளமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த தரவுத் தளம் அமைப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயணிகளின் பெயர்கள் உள்ளடங்கிய பதிவு முறைமையொன்று பயணிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தரவுத் தளமொன்றை பேணுவதன் மூலம் பாரதூரமான குற்றச் செயல்கள் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் திரட்டப்படும் தரவுகள் பகிரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்பு இல்லாதவர்களின் தரவுகள் வெறும் ஆறு மாதம் மட்டுமே தரவுத் தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.