ரஷ்யாவின் அணு உயிரியல் மற்றும் ரசாயன ஆயுத பாதுகாப்பு படையணியின் தளபதி லெப்டினன் ஜெனரல் இகோர் கிரிலோவ் குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் உக்ரைன் செயற்பட்டு உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரசாயன ஆயுத பயன்பாட்டுக்கு இந்த படை அதிகாரி பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இலத்திரனியல் ஸ்கூட்டர் ஒன்றில் பொருத்தப்பட்ட தூரத்திலிருந்து இயக்கக்கூடிய வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டு இகோர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் படையினர் செயற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டி உள்ளது.
இகோர் ஓர் போர் குற்றவாளி எனவும் குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன்னர் இகோர் நீதிமன்றத்தில் பிரசன்னம் ஆகாத நிலையில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்கிரேனில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி எகோருக்கு உக்கிரேனில் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக இகோர் குற்றம் சுமத்தி இருந்தார்.
எனினும் இதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
இகோர் கடந்த ஏழு ஆண்டுகளாக ரஷ்யாவின் ரசாயன அணு ஆயுத பாதுகாப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.
இகோரின் உத்தரவிற்கு அமைய ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் சுமார் 4800 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.