சிரியாவில் போர் இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை என அந்நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி கியர் பெடர்சன் தெரிவித்துள்ளார்.
பசர் அல் அசாட் பதவி கவிழ்க்கப்பட்டதன் ஊடாக போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது என கருதப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி ஆதரவு ஆயுதப் படையினருக்கும் குர்திஷ் ஆயுதப் படையினருக்கும் இடையில் நாட்டின் வடக்குப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு வாரங்களாக குறித்த பகுதிகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் பெடர்சன் தெரிவித்துள்ளார்.
ஆயுத போராட்டங்கள் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்யும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் மோதல்கள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.