சுவிட்சர்லாந்தில் அதிகளவு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளக்கூடிய ஒர் தளமாக சுவிட்சர்லாந்து பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக ரீதியான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பா முழுவதிலும் சுமார் 54 சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்கள் இயங்கி வருவதாக சுவிட்சர்லாந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு சுவிட்சர்லாந்து பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.