சுவிட்சர்லாந்து மக்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் தாழ்நிலப் பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு நிலைமைகள் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக நாளைய தினம், கிழக்கு மற்றும் மத்திய சுவிட்சர்லாந்து பகுதிகளில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும், அநேக பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை மலைப் பாங்கான பகுதிகளில் கூடுதல் அளவில் பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருக்கும் எனவும் போக்குவரத்து செய்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.