-2.3 C
Switzerland
Wednesday, January 15, 2025

வரி அறவீடு குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

Must Read

உழைக்கும் போதே செலுத்தும் வரி தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியதாக அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்

மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது.

மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது.
அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
250,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

300,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

350,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 25.5% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த நிவாரணம் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக நிவாரணம் என நாம் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தத்தில் வெற்றி பெற்றோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES