சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தானியங்கி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதல் கட்டமாக தானியங்கி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நோக்கில் பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
விமான நிலையப் பணியாளர்களை போக்குவரத்து செய்ய இந்த புதிய தானியங்கி பேருந்து அல்லது ரோபோ டெக்ஸி பயன்படுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த ரோபோ டெக்ஸி சேவைக்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எதிர்வரும் மாதங்களில் சாதிகள் அற்ற தானியங்கி வாகனங்கள் விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் பாதுகாப்பு அடிப்படையில் இந்த தானியங்கி பேருந்தில் சாரதி ஒருவர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.