தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவளித்ததாக இரண்டு சுவிட்சர்லாந்து பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
22 மற்றும் 28 வயதுடைய இரண்டு சுவிட்சர்லாந்து பிரஜைகள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய வழக்குரைஞர் அலுவலகம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இந்த இரண்டு சுவிஸ் பிரஜைகளும் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த இருவரும் சிரியா சென்று அங்கு தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இருவருக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.