சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் எதிராக அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து மெல்போர்ன் செல்லும் விமானத்தில், 41 வயதான குறித்த நபர், ஒரு பெண் பயணி மீது அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை (AFP) குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெண் பயணி விமான ஊழியர்ளுக்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.
விமானம் மெல்போர்ன் விமான நிலையத்திற்கு சென்றடைந்த போது பொலிஸ் அதிகாரிகள் பயணிகள் மற்றும் விமான ஊழியர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர்.
குற்றவியல் (விமானப் போக்குவரத்து) சட்டம் 1991 (Cth) இன் பிரிவு 15 (1) இன் அடிப்படையில், குற்றச் சட்டம் 1900 (ACT) பிரிவு 60 (1) க்கு மாறாக, ஒரு அநாகரீகமான செயலின் ஒரு குற்றச்சாட்டை குறித்த இலங்கையர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த இலங்கையருக்கு பிணை வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதியன்று மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எந்த வகையிலும் நெகிழ்வுத்தன்மை காண்பிக்கப்படாது என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.