சுவிட்சர்லாந்தில் போதியளவு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக நாட்டில் வாடகை வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக ஓர் நிலைப்பாடு காணப்படுகின்றது.
எனினும் கடந்த ஆண்டில் சுமார் 400000 புதிய வீடுகள் வாடகைக்காக விடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 5.6 வீத அதிகரிப்பாகும்.
சுவிட்சர்லாந்தின் 26 கான்டன்களில் 21 கான்டன்களில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
பேசல் கவுன்டி, ஜூரா, சொலொத்ரோன் உள்ளிட்ட பல கான்டன்களில் போதியளவு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சூரிச் மற்றும் ஜெனீவா ஆகிய கான்டன்களில் வாடகை வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.