சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்கால இரு தரப்பு உறவுகள் தொடர்பில் இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 197 சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு குறித்த உடன்படிக்கை எதிர்வரும் ஆண்டில் அதிகாரபூர்வமாக கைச்சாத்திடப்பட உள்ளது.
இந்த இணக்கப்பாட்டின் மூலம் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 12 துறைகள் தொடர்பில் இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.