எதிர்வரும் 2025ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்றின் இரண்டு சபைகளும் இந்த வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அனுமதி வழங்கியுள்ளன.
இராணுவ செலவுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த செலவுகள் வெளிநாட்டு உதவிகளை குறைப்பதன் மூலம் ஈடு செய்யப்பட உள்ளது.
மேலும், வெளிநாட்டு உதவிகளை குறைப்பது தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2032ம் ஆண்டளவில் இராணுவ செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு வீதமாக பேணுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச ஊழியர்களுக்கான செலவுகளை குறைப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளது.