ஜெர்மனியில் சனநெரிசல் மிக்க கிறிஸ்மஸ் சந்தையொன்றிலிருந்த மக்கள் மீது வாகனம் மோதச் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் 60 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் மாக்டெபெர்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட நபர் 2006ம் ஆண்டு முதல் ஜெர்மனியில் தங்கியிருப்பதாகவும், அவர் ஒர் நிரந்தர வதிவிட உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் 15 பேர் பாரதூரமான அடிப்படையில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.