சுவிட்சர்லாந்தின் கோதார்ட் சுரங்கப் பாதையின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக இவ்வாறு போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யூரி கான்டன் பொலிஸார் இந்த விடயம் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பனிப்பொழிவு காரணமாக தற்காலிக அடிப்படையில் வாகன போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சுமார் 125 சென்றி மீற்றர் அளவில் பனிப்பொழிவு நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கிறிஸ்மஸ் காலப் பகுதியில் மலைப்பாங்கான பகுதிகளில் இவ்வாறு கூடுதல் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.