எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் வாகனம் செலுத்துவது தொடர்பில் புதிய சட்டம் அறிமுகமாகின்றது.
வாகன போக்குவரத்து தொடர்பில் இவ்வாறு புதிய சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
வாகனங்களில் சத்தம் எழுப்பப்பட்டால் அவ்வாறான வாகன சாரதிகள் மீது அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் அதிக அளவு சத்தத்தை எழுப்பும் நபர்களுக்கு பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகள் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒளி மாசடைதல் தொடர்பில் அறவீடு செய்யப்படும் அபராதத்திற்கு மேலதிகமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கார்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டன சத்தத்தை அதிக அளவு எழுப்பி சுற்றுச்சூழலுக்கு இழைக்கும் தீங்கினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.