சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.,
60, 42, 33 மற்றும் 31 வயதுடைய ஈக்வடோர் பிரஜைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் இத்தாலியில் வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிக்கினோ கான்டனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம் பெற்ற இரண்டு கொள்ளை சம்பவங்களுடன் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பு உண்டு என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து ஆயுதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.