சுவிஸ் விமான சேவை சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலைய நிர்வாகம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
விமான சேவை தொடர்பில் பயணிகளின் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளும் விமான சேவை நிறுவனம் மீது சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
விமானங்கள் காலதாமதமாவது தொடர்பிலான குற்றச்சாட்டுகளை சுவிஸ் விமான சேவை நிறுவனம் ஏற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
எனினும் விமான பயண பொதிகள் தொலைதல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் சூரிச் விமான நிலைய நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.